நடிகர் விஜய் துவங்கிய தமிழக வெற்றி கழகம் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் பெரிய மாற்றத்தை உருவாக்கும் என பலரும் நம்புகிறார்கள். சிலரோ அப்படி ஏதும் நடக்காது என்றும் சொல்கிறார்கள். தவெக தனித்து போட்டியிட்டால் எல்லா கட்சிகளின் ஓட்டுக்களையும் விஜய் பிரிப்பார்.. இது திமுகவிற்கு சாதகமாகவே அமையும் என பலரும் சொல்கிறார்கள்
இந்நிலையில்தான் சமீபத்தில் தவெகவுக்கு எவ்வளவு ஆதரவு கிடைக்கும் என்கிற ஒரு சர்வே வெளியானது. அதில் தவெக கூட்டணியே அமைக்காமல் தனியாக தேர்தலை சந்தித்தாலும் 31 சதவீத வாக்குகளை வாங்கும். திமுகவை விட இரண்டு அல்லது மூன்று சதவீதம் கூடவே வாக்குகள் தவெகவிற்கு விழும். அதிமுக மூன்றாவது இடத்திற்கு செல்லும். இந்த முறை நாம் தமிழர் கட்சி 3 சதவீதத்திற்கும் கீழ்தான் வாக்குகளை பெறும்.
தவெகவுக்கு பெண்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக 40 சதவீத மக்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். குறிப்பாக சிறுபான்மையினரின் 80 சதவீத ஓட்டு தவெகவிற்கு கிடைக்கும். எனவே விஜய் முதல்வராவது உறுதி என்றெல்லாம் அதில் கூறப்பட்டிருந்தது. இந்த சர்வேவை சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டார்கள். குறிப்பாக விஜய் ரசிகர்களும், தவெக ஆதரவாளர்களும் இந்த சர்வே தொடர்பான அப்டேட்டுகளை பகிர்ந்து தவெகதான் வெற்றி என்றெல்லாம் பூரித்தார்கள்.
இந்த சர்வே பற்றி நேற்று பனையூர் அலுவலகத்தில் நடந்த மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும் இது பற்றி பேசி சந்தோஷப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால் சில தவெக நிர்வாகிகள் இதை மறுக்கிறார்கள். இந்த சர்வேயில் இருப்பது போல களநிலவரம் இல்லை, இதை காண்பித்து தளபதியை ஏமாற்றுகிறார்கள். அவரும் நாம்தான் அடுத்த முதலமைச்சர் என நம்பிக் கொண்டிருக்கிறார்.. தேர்தல் ரிசல்ட் வந்த பின் அவருக்கு உண்மை நிலவரம் தெரியும் என்று பேசுகிறார்களாம்.