Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் தமிழக முதல்வர் அவருக்கு கோரிக்கை

Advertiesment
karur
, சனி, 11 மார்ச் 2023 (23:45 IST)
சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்த எங்களுடைய உடற்கல்வி ஆசிரியர் அவர்கள் மீதுபொய் வழக்கு போட்ட வட்டாட்சிய சிவகுமார் அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம் என்று கரூர் அரசுக் கல்லூரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியுள்ளதாவது:


''அரசு கலைக் கல்லூரி ஆனது 1966 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது இங்கு தற்போது ஐயாயிரம் மாணவர்கள்  கல்வி பயின்று வருகிறார்கள்.விளையாட்டிற்கு எந்த முக்கியத்துவம் இல்லாமல் இருந்த கல்லூரியை 2018 ஆம் ஆண்டு உடற்கல்வி இயக்குனராக பொறுப்பேற்ற ராஜேந்திரன் அவர்கள் மிக சிறப்பான முறையில் தற்போது செயல்பட்டு கொண்டு வருகிறார்.

2019 ஆம் ஆண்டிலிருந்து கல்லூரியில் மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெறும் மாணவர்களின் புகைப்படங்களை விளையாட்டுக் குழு ஒப்புதலுடன் மாணவர்களை பெருமைப்படுத்த கல்லூரியில் வைத்து வருகிறார்.அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த மரியாதைக்குரிய அன்பழகன் ஐயா அவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள விளையாட்டு துறை சம்பந்தமான அவர்களை பார்த்து பாராட்டி உள்ளார்.

கடவுள் ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனுக்கும் ஒரு தனி திறமையை வழங்கி இருப்பார் அதன் அடிப்படையில் நாங்கள் விளையாட்டில் ஆர்வம் கொண்டுதற்போது சாதனை புரிந்து வருகிறோம்..மாணவர்களின் விளையாட்டு போட்டிகளில் சாதனை மூலம் இன்று தமிழ்நாட்டில் கரூர் அரசு கலைக்கல்லூரி முதல் இடத்தில் உள்ளது.தற்போது பல மாணவர்கள் காவல் துறையிலும் இந்திய ராணுவத்திலும் இன்னும் பல துறைகளிலே விளையாட்டு இட ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றார்கள்.கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள பதாகைகள் என்பது மாணவர்களின் நலன் கருதி வைக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு சம்பந்தப்பட்ட பதாகைகள், ஒழுக்கம் சம்பந்தப்பட்ட பதாகைகள், ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட பதாகைகள், வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட பதாகைகள்,அரசின் திட்டங்கள் சம்பந்தப்பட்ட பதாகைகள்,விளையாட்டு திடல்  சம்பந்தப்பட்ட பதாகைகள்,வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டின் கீழ் மாநில அரசு சம்பந்தமான மத்திய அரசு சம்பந்தமான என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன என்பதை சம்பந்தப்பட்ட பதாகைகள்போன்றவை கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது

.கரூர் மாவட்ட பிரபு சங்கர் அவர்கள் ஐஏஎஸ் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்வாகியுள்ளார் என்பது எங்களுக்கு தெரியும்.ஐயா அவர்கள் தனித்திறமையான கிட்டார் வாசிப்பது உடற்பயிற்சி மையத்துக்கு சென்று உடற்பயிற்சி செய்வது போன்ற செயல்களெல்லாம் எங்களையும் ஊக்கப்படுத்தி உள்ளது .இதன் மூலமாக மாணவர்களாகிய நாங்கள் தெரிவிப்பது என்னவென்றால் ''கல்லூரியில் பல நல்ல விஷயங்களை தன்னுடைய சொந்த செலவில் உடற்கல்வி ஆசிரியர் செய்துள்ளது என்பதை உங்களிடம் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கரூர் அரசு கலைக்கல்லூரியில் ADMK period பல ஊழல்கள் நடைபெற்று உள்ளது. குறிப்பாக அரசாங்கத்தை ஏமாற்றி சிலர் தற்போது பணிபுரிந்து வருகின்றார்கள் குடித்துவிட்டு கல்லூரி வருவது மாணவர்கள் பணத்தைத் திருடுவது போன்ற செயல்களில் சில ஆசிரியர்கள் ஈடுபட்டு வந்தனர்.மாணவர்களாகிய எங்களுக்கு தெரியும் இவர்கள் மீதெல்லாம் கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.விளையாட்டுப் போட்டியில் பங்கு வரும் மாணவர்களுக்கு பயிற்சி பெரும் மாணவர்களுக்கு 15 நாட்கள் தான் ஓடி தருவேன் என்று முதல்வர் கூறுவது வேடிக்கையாக உள்ளது.தற்போது தமிழ்நாட்டில் மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயாநிதி ஸ்டாலின் அவர்கள் விளையாட்டில் அதிகப்படியான மாணவர்கள் பங்கு பெற்று வேலைவாய்ப்பினை பெற வேண்டும் என்று கூறுவது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.ஆனால் கல்லூரியில் சில பேராசிரியர்கள் விளையாட செல்லக்கூடாது என்று சொல்வதுவேதனையாக உள்ளது. இவை எங்களுடைய தனிப்பட்ட திறமையை வெளிப்படுத்தும்போட்டி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.கல்லூரியில் சில பேராசிரியர்கள் பணி நேரத்தின் போது வகுப்பிற்கே வருவது கிடையாது இதையெல்லாம் கல்லூரி நிர்வாகம் கண்டு கொள்வதே கிடையாது.எங்கள் மீது அன்பு செலுத்தி அரவணைத்து எங்களை நல்வழிப்படுத்துவது தான் ஒரு ஆசிரியரின் கடமை என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள்.இக்கல்லூரியில் சில பேராசிரியர்கள் ஹிட்லர் போல நடந்து கொள்வதுதான் வேதனையாக உள்ளது.
 
விளையாட்டு என்பது எங்கள் உயிர் மூச்சு விளையாட்டு என்பது உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதை ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.எனவே சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்த எங்களுடைய உடற்கல்வி ஆசிரியர் அவர்கள் மீதுபொய் வழக்கு போட்ட வட்டாட்சியர் சிவகுமார் அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்.திராவிட மாடல் ஆட்சியில் சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருக்கும் தமிழக முதல்வர் பார்வைக்கு இதை நாங்கள் எடுத்துச் செல்கின்றோம். தயவுசெய்து சரியான முறையில் உரிய விசாரணை செய்து தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் அவர்களை இருகரம் கூப்பிவிளையாட்டு மாணவர் ஆகிய நாங்கள் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.'' என்று கூறியுள்ளனர்.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசியலுக்கு வராதது ஏன்? நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்