Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உணவு சமைத்து தராததால் அம்மாவை கொன்ற மகன்! பரபரப்பு சம்பவம்

Advertiesment
Death

Sinoj

, புதன், 7 பிப்ரவரி 2024 (13:50 IST)
கர்நாடகம் மாநிலம் பெங்களூர் கே.ஆர். புரம் பீமய்யா லே அவுட் பகுதியில் வசிப்பவர் சந்திரப்பா. இவரது மனைவி நேத்ரா(40). இத்தம்பதிக்கு 17 வயதில் உள்ளார்.

இவர் கோலார் மாவட்டம் மும்பாகலில் உள்ள ஒரு கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார்.

இந்த நிலையில், நேத்ரா ஆடம்பர பிரியை என்றும் அவருக்கு வேறொருவருடன் தொடர்பு இருந்ததால் வீட்டில் சரியாக சமைக்காமல்,  வெளியில் அடிக்கடி சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால், வீட்டில், சந்திரப்பா, மற்றும் மகன் இருவரும் நேத்ராவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், சம்பவத்தன்று, வீட்டில் சமையல் செய்ய தாமதமானது குறித்து நேத்ராவுக்கும், அவரது மகனுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. இதில் ஆத்திரமடைந்த மகன் இரும்பு கம்பியால் அவரை தாக்கியுள்ளார்.

அங்கிருந்த சந்திரப்பாவும், மனைவியை தாக்கியதில் அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

பின்னர் தந்தை கொடுத்த ஆலோசனையில் 17 வயது மாணவர் போலீஸாருக்கு போன் செய்து, கல்லூரிக்கு செல்ல காலை உணவை செய்து தராததாலும் மோசமான திட்டியதாலும் அம்மாவை கொன்றதாக வாக்கு மூலம் அளித்தார்.
 

போலீஸாரின் விசாரணையில்   மாணவர்,  ‘’சம்பவத்தன்று, வீட்டில் தன் தந்தையும் இருந்ததாகவும்,  அவர்தான் உனக்கு 17 வயதுதான் ஆகிறது. குற்றத்தை ஒப்புகொண்டால் குறைவான தண்டனை கிடைக்கும் என திட்டம் போட்டதாக ‘’கூறியுள்ளார். இதையடுத்து சந்திரப்பாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதுச்சேரியில் பாஜக போட்டி!