மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா இல்லம் அரசுடமையானது என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எனவே, வருமான வரித்துறைக்கு ஜெயலலிதா செலுத்த வேண்டிய ரூ.36 கோடி மற்றும் வாரிசுகளான தீபக் மற்றும் தீபாவிற்கு நிவாரணமாக ரூ.32 கோடி என மொத்தம் ரூ.68 கோடியை ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை தமிழக அரசு விலைக்கு வாங்க ஏதுவாக நீதிமன்றத்தில் டெபாசிட் செய்துள்ளது.
எனவே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா இல்லம் அரசுடமையானது என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், வேதா நிலையத்திற்கு உரியவர்கள் இழப்பீட்டு தொகையை நகர உரிமையியல் நீதிமன்றத்தின் மூலமாக பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா கடும் எதிர்ப்பு தெரிவித்து வேதா இலம் தங்களின் பூர்வீக சொத்து என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திமுக இளைஞர் அணி செயலாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
ஏழைகளிடம் மின்கட்டண கொள்ளை நடத்தியும் டாஸ்மாக் மூலம் கஜானாவை நிரப்பியும் முன்னாள் முதலாளியம்மாவின் பங்களாவை கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளது அடிமைக்கூட்டம். 4 மாத கொரோனா ஊரடங்கால் தவிக்கும் சாமானியர்களுக்கு உதவாத அரசுப் பணம், எடுபிடிகளின் அரசியல் லாபத்துக்கு பயன்படுவது வெட்கக்கேடு என தெரிவித்துள்ளார்.