சென்னை மாநகர பேருந்து ஒன்று திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் இருந்து பொன்னேரிக்குச் சென்றுகொண்டிருக்கும்போது பலத்த காற்று வீசியதில், பேருந்தின் மேற்கூரை தூக்கிவீசப்பட்டது.
சென்னை மாநகர பேருந்து ஒன்று, திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் இருந்து பொன்னேரிக்கு நேற்று மாலை சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென்று காற்றுடன் கூடிய மழை பெய்தது.
பலத்த காற்று வீசியதில் அரசுப் பேருந்தின் மேற்கூரை சரிந்து கீழே விழுந்தது. இதில், பேருந்திற்குள் அமர்ந்திருந்த பயணிகள் அச்சமடைந்தனர். இதையடுத்து, பேருந்து சாலையோரம் நிறுத்தப்பட்டது.
பேருந்தில் வந்த பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று செங்குன்றம் டிப்போவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அரசுப்பேருந்தின் மேற்கூரை சரிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.