ஓடிடி தளங்களுக்கு புதிய விதிகளை மத்திய அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. ஓடிடி தளங்களில் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இடையில் மற்றும் இறுதியில் புகையிலைக்கு எதிரான எச்சரிக்கை படங்கள் காட்டப்பட வேண்டும்.
புகையிலை காட்சிகளின் போது கீழ்ப்பகுதியில் எச்சரிக்கை வாசகத்தை பதிவிட வேண்டும். புகையிலை பாதிப்பு ஆடியோவை 20 வினாடிகள் தொடக்கத்திலும் இறுதியிலும் ஒளிபரப்ப வேண்டும்.
ஓடிடி வீடியோ வெளியிடுவோர் இந்த புதிய விதிகளை பின்பற்றத் தவறினால், மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.