Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயிலுக்கு போறத பத்தி கவலையில்ல, ஆனா... சீமானின் விடாபிடி பேச்சு!!

Advertiesment
Seeman
, வியாழன், 17 அக்டோபர் 2019 (09:22 IST)
என்னை கைது செய்வது பற்றி எந்த கவலையும் இல்லை, ஆனால் ராஜிவ் காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் என சீமான் பேசியுள்ளார். 

 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தது நாங்கள்தான் என சீமான் பேசியது சைச்சர்க்குள்ளாகிய நிலையில் இதனால்  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் எழுவர் விடுதலைக்கு பிரச்சனை ஏற்படும் என அஞ்சப்பட்டது. 
 
இதற்கு பதில் அளிக்கையில் சீமான் மீண்டும் சர்ச்சைக்குள்ளான வகையில் பேசியுள்ளார். சீமான் பேசியதாவது, 28 ஆண்டுகளாக ராஜீவ் காந்தி கொலைக்கும் விடுதலைப்புலிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்று நான் கூறியபோது அதை ஏற்று இந்த அரசு 7 பேரை விடுதலை செய்ததா? 
webdunia
இப்பொழுது நான் கூறியது மட்டும் எப்படி இது பிரச்சனையாகும்? நான் கூறியது பொய் என்றால் ராஜீவ் காந்தி கொலைக்கும் இந்த எழுவருக்கும் சம்பந்தம் இல்லை என்று உடனடியாக அவர்களை விடுதலை செய்வார்களா? 
 
மேலும் என் இனத்தை அழித்தது காங்கிரஸ், அதற்கு துணை நின்றது திமுக. இதை வேடிக்கை பார்த்தது அதிமுக, பாஜக. இது வரலாற்று உண்மை. எனக்கு கீழே வருகின்ற தலைமுறைக்கு நான் நம் இனத்தை கொன்றது யார்? கூட நின்றது யார்? எவ்வளவு துரோகத்தால் வீழ்த்தப்பட்டோம் என எடுத்து சொல்ல வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. 
 
என்னை கைது செய்தால் நான் அது குறித்து கவலைப்படமாட்டேன். ஆனால், ராஜீவ் காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் என பேசி மீண்டும் சர்ச்சையை பெரிதாக்கியுள்ளார் சீமான். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேலையை காட்டும் வடகிழக்கு பருவமழை: சென்னை ரெய்ன்ஸ்!!