புகாரளிக்க வந்தவர் காவல் நிலையத்தில் தற்கொலை! மனநலம் பாதிக்கப்பட்டவரா? - கோவையில் அதிர்ச்சி சம்பவம்!

Prasanth K
புதன், 6 ஆகஸ்ட் 2025 (11:28 IST)

கோவையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தவர் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவை கடைவீதி காவல் நிலையத்தில் புகாரளிக்க வந்த ஒருவர் காவல் நிலையத்திற்குள்ளேயே மர்மமான முறையில் இறந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கடைவீதி காவல் நிலைய காவலர்களிடம் காவல் ஆணையர் சரவண சுந்தர் உடனடியாக விசாரணை மேற்கொண்டார்.

 

பின்னர் இதுகுறித்து விளக்கமளித்த அவர் “கோவை கடைவீதி காவல் நிலையத்திற்கு வந்தவர் பெயர் அறிவொளி ராஜன். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அவரது உறவினர்கள் கூறுகின்றனர். அவர் காவல் நிலையத்திற்கு வந்தபோது தன்னை சிலர் துரத்துவதாக கூறியுள்ளார். பின்னர் யாரும் கவனிக்காத நேரம் எஸ்.ஐ அறைக்குள் சென்றவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

 

இது காவல்நிலையத்தில் நடந்த தற்கொலை. லாக்கப் மரணம் அல்ல. பணியில் இருந்த காவலர்களின் கவனக்குறைவால் இது நடந்துள்ளது. இதுகுறித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீடு மாறியவர்கள் வாக்காளர் பட்டியலில் இணைய என்ன செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம்

கேரள குருவாயூர் கோயிலில் 'ரீல்ஸ்': ஓவியக் கலைஞர் ஜஸ்னா சலீம் மீது மீண்டும் வழக்கு!

வீடு தேடி போய் கமலை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்!.. வைரல் புகைப்படங்கள்...

மிளகாய் பொடி தூவி நகைக்கடையில் கொள்ளையடிக்க முயற்சித்த பெண்.. அதன்பின் நடந்த ட்விஸ்ட்..!

சகோதரர் மருத்துவமனையில் அனுமதி!.. பெங்களூர் பறக்கும் ரஜினிகாந்த்!...

அடுத்த கட்டுரையில்
Show comments