Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீடே இல்லை.. இல்லாத வீட்டுக்கு வரி செலுத்திய நபர்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

Advertiesment
கோவை

Siva

, திங்கள், 4 ஆகஸ்ட் 2025 (16:08 IST)
கோவையில், இலவச வீட்டுமனைப் பட்டா பெற்ற ஒருவர், அந்த மனையில் வீடு கட்டாத நிலையிலும், வீடு கட்டியதாக கூறி பல ஆண்டுகளாக சொத்துவரி செலுத்திவந்த முறைகேடு அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
கோவையை சேர்ந்த கல்பனா ராமசாமி என்பவர், தனக்கு சொந்த வீடு இருந்தும், அதை மறைத்து இலவச வீட்டுமனை பட்டா பெற்றதாக கூறப்படுகிறது. இலவச வீட்டுமனை பெற்றவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் வீடு கட்ட வேண்டும், இல்லையெனில் அந்த இடம் வேறு ஒருவருக்கு வழங்கப்படும் என்ற விதி உள்ளது.
 
ஆனால், கல்பனா ராமசாமி அந்த மனையில் கடந்த 15 ஆண்டுகளாக வீடு கட்டாமலேயே காலந்தாழ்த்தி வந்துள்ளார். சமீபத்தில், அந்த மனையில் வீடு கட்டியதாக கூறி, சொத்துவரியையும் செலுத்தி வந்திருக்கிறார்.
 
அதிகாரிகள் அந்தப் பகுதியில் ஆய்வு செய்தபோது, அந்த மனையில் வீடு எதுவும் கட்டப்படவில்லை என்பது தெரியவந்தது. இல்லாத வீட்டிற்கு சொத்துவரி கட்டிய இந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
இந்தச் சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பியூன் வேலைக்கு விண்ணப்பித்த எம்பிஏ, பிஎச்டி படித்தவர்கள்.. தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்?