அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் அமல்படுத்தப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தை அறிமுக செய்தார்.
இதற்கு பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் உள்ள முதல்வர்களும், எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். அத்துடன் எதிர்வினை ஆற்றி வந்தனர்.
இந்நிலையில், தமிழகத்தில் அக்டோபர் 1 ஆம்தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் அமல்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.