Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாஜகவில் இணைந்ததால் அண்ணன் மகனையே கொன்ற சித்தப்பா

Advertiesment
Tamilnadu Politics
, புதன், 29 மே 2019 (13:05 IST)
கோயம்புத்தூர் பகுதியில் மாநில கட்சி ஒன்றின் நிர்வாகியாக இருந்த ஒருவர் பாஜக கட்சிக்கு மாறியதால் அவரை கொன்ற அவரது சித்தப்பா குடும்பத்தினரை போலீஸ் கைது செய்துள்ளது.

கோயம்புத்தூரை சேர்ந்த விஜயக்குமார் என்பவர் ஒரு மாநில கட்சியில் நிர்வாகியாக செயல்பட்டு வந்துள்ளார். அவர் தனது அண்ணன் மகனான சந்தோஷ்குமார் என்பவரையும் அந்த கட்சியில் சேர்த்து விட்டுள்ளார். கட்சி பணிகளில் ஆர்வம் காட்டிய சந்தோஷ்குமார் நாளடைவில் அந்த கட்சியின் மாவட்ட செயலாளராக உயர்ந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தனது ஆதரவாளர்களுடன் சந்தோஷ்குமார் பாஜக கட்சிக்கு மாறிவிட்டார். இதனால் கடுப்பான அவரது சித்தப்பா விஜயக்குமார் அவரிடம் சென்று அடிக்கடி சண்டையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக மத்தியில் ஆட்சியமைத்தது. அதற்கு பிறகு 26ம் தேதியன்று பைக்கில் சென்று கொண்டிருந்த சந்தோஷ்குமாரை அவரது சித்தப்பா விஜயக்குமார் தனது ஆட்களோடு சென்று கத்தியால் குத்தி கொன்றுவிட்டு தப்பி விட்டார். இந்த கொலை தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தும்போது விஜயக்குமார் மேல் சந்தேகம் ஏற்பட்டு விசாரிக்க பார்த்தபோது அவர் மாயமாகிவிட்டது தெரிய வந்தது. அவரை தேடி பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதனால் சித்தப்பா விஜயக்குமார் கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் தாமாகவே வந்து குடும்பத்துடன் சரணடைந்துவிட்டார்.

கட்சி மாறியதற்காக சொந்த அண்ணன் பையனையே விஜயக்குமார் கொன்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சோமாலியா வரைபடத்தில் காணாமல் போனது எப்படி?