Publish Date: Wed, 29 May 2019 (08:51 IST)
Updated Date: Wed, 29 May 2019 (08:53 IST)
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக அதிக இடங்கள் வெற்றி பெற்று ஆட்சியமைக்க இருக்கிறது. இதற்கான பதவியேற்பு விழா நாளை நடைபெறுகிறது. இதில் பல மாநில அரசியல் கட்சியினரும் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் விழாவில் கலந்து கொள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றியதில் ஏற்கனவே செம கடுப்பில் இருக்கிறார் மம்தா. மேலும் அவர் கட்சி எம்.எல்.ஏக்கள் 2 பேரும், 50 கவுன்சிலர்களும் நேற்றுதான் பாஜகவுக்கு மாறினார்கள். தொடர்ந்து எல்லா பக்கமும் ஆப்பு வைக்கும் பாஜக பதவியேற்கும் விழாவில் மம்தா கலந்துகொள்வாரா என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த மம்தா “பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு மாநில தலைவர்கள் அழைக்கப்படுவது வாடிக்கைதான். பங்கேற்க அழைப்பு வந்தால் அரசியல் சாசன நடைமுறைகளின்படி கலந்து கொள்ள வேண்டும் என்பதால் கலந்து கொள்வேன்” என்று கூறியிருக்கிறார்.