Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெண்ணை துன்புறுத்திய போலீஸ்காரர்கள் – ஒரு வருடம் கழித்து தண்டனை

பெண்ணை துன்புறுத்திய போலீஸ்காரர்கள் – ஒரு வருடம் கழித்து தண்டனை
, செவ்வாய், 28 மே 2019 (19:50 IST)
ஹரியானாவில் பூங்காவில் நின்றிருந்த பெண்ணை துன்புறுத்திய போலீஸ்காரர்களுக்கு ஒரு வருடம் கழித்து தண்டனை கிடைத்துள்ளது. அந்த பெண்ணை அவர்கள் அடித்து துன்புறுத்திய வீடியோ இணையத்தில் வெளியானதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஹரியானாவின் ஃபரிதாபாத் பகுதியில் உள்ள பூங்காவில் ஒரு பெண் ஒருவருடன் பேசி கொண்டிருந்திருக்கிறார். அப்போது ஆதார்ஷ் நகர் காவல் நிலையத்தை சேர்ந்த இரண்டு கான்ஸ்டபிள் மற்றும் மூன்று சிறப்பு பிரிவு போலீஸார் அந்த இடத்திற்கு வந்துள்ளனர். இவர்களை பார்த்ததும் அந்த பெண்ணிடம் பேசி கொண்டிருந்த நபர் ஓடிவிட்டார். பிறகு அந்த பெண்ணை விசாரித்து விவரங்களை ஒருவர் சேகரித்து கொண்டிருந்திருக்கிறார். அந்த பெண் கொடுத்த விவரங்களில் நம்பிக்கையில்லாத இன்னொரு போலீஸ் பெல்ட்டால் அந்த பெண்ணை அடிக்க தொடங்கியிருக்கிறார். தன்னை விட்டுவிடும்படி தொடர்ந்து கேட்டும் அவர் அந்த பெண்ணை அடித்திருக்கிறார்.

தற்போது இணையத்தில் பரவிய இந்த வீடியொவை பார்த்த பலர் கண்டன குரல்களை எழுப்பியுள்ளனர். ஹரியானா பெண்கள் நல அமைப்பு “அந்த பெண் தவறு செய்தாளா என்பதை விசாரிக்க மகளிர் போலீஸ்தான் வந்திருக்க வேண்டும். பிறகு எதற்காக மகளிர் காவல் நிலையங்கள் கட்டிவத்துள்ளார்கள்” என கேள்வி எழுப்பியுள்ளது.

இதை தொடர்ந்து ஹரியானா சட்ட ஒழுங்கு துணை ஆணையர் நவ்தீப் விர்க் “ஹரியானா போலீஸ் ஒரு பெண்ணை துன்புறுத்திய வீடியோ தற்போது இணையங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவம் அக்டோபர் 2018ல் நடந்துள்ளது. என்றாலும் அப்போது இதுபற்றி யாரும் புகார் அளிக்கவில்லை. ஆனாலும் நாங்கள் இதுபற்றி கடுமையான நடவடிக்கை எடுப்போம். ஹரியானா காவல்துறையினர் பெண்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். எந்த காரணத்திற்காகவும் அவர்களிடம் சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொள்ள கூடாது” என தெரிவித்தார்.

இதற்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக இரண்டு கான்ஸ்டபிள்களும் அவர்களுக்கு உடந்தையாய் இருந்த மூன்று சிறப்பு பிரிவு போலீஸாரும் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது இரண்டு சிறப்பு பிரிவு போலீஸார் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மற்றவர்களும் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அந்த பாதிக்கப்பட்ட பெண் யார் எனவும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலா மீதான மோசடி வழக்கு : விசாரணை தேதி ஒத்திவைப்பு