Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பசுமைக்குடி தன்னார்வ அமைப்பின்....தேக ஆரோக்கியமே தேச ஆரோக்கியம் !!

Advertiesment
பசுமைக்குடி தன்னார்வ அமைப்பின்....தேக ஆரோக்கியமே தேச ஆரோக்கியம் !!
, திங்கள், 21 டிசம்பர் 2020 (22:55 IST)
தேசிய அளவில் வீரர்களை உருவாக்க பசுமைக்குடி தன்னார்வ அமைப்பின் மற்றுமொரு முயற்சி தேக ஆரோக்கியமே தேச ஆரோக்கியம் – கரப்பந்தாட்டத்தினை ஊக்குவிக்கும் புதிய திட்டம்

பசுமைக்குடி தன்னார்வ இயக்கத்தின் மற்றுமொரு முயற்சியாக கைப்பந்து குழுக்களை வலுப்படுத்த அந்த குழுக்களுக்கு தங்களது சொந்த முயற்சியில் பந்து மற்றும் வலைகளை தேடி சென்று உதவி வருகின்றது. அதுமட்டுமில்லாமல் இளைஞர்களின் தேக ஆரோக்கியமே தேச ஆரோக்கியம்  என்று கருதி இதுவரை 3 கிராமத்தில் கைப்பந்து குழுக்களுக்கு விளையாட்டு உபகரணங்களை கொடுத்து வருகின்றது.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கடவூர் ஊராட்சி ஒன்றியம், வரவணை கிராமத்திற்குட்பட்ட வ.வேப்பங்குடி என்கின்ற பெயரை பசுமைக்குடி என்ற பெயராகவும், ஏற்கனவே இந்த காய்ந்த பூமியில் தற்போது ஏராளமான மரங்களை வைத்து, அதற்கு தனது சொந்த செலவில் தண்ணீரையும் ஊற்றி பரமாரித்து தற்போது அடுத்த தலைமுறைக்கு மட்டுமில்லாமல் இந்த தலைமுறைக்கும் நல்ல சுவாசிக்க காற்று மற்றும் மழை மேகங்களை ஏற்படுத்திட அருமையான திட்டம் தமிழக அளவில் கேட்போருக்கு கேட்ட இடத்தில் மரக்கன்றுகள் மட்டுமில்லாமல், பன விதைகளை கொடுத்து மற்றுமொரு இயற்கை பூமிக்காக கடுமையாக பாடுபட்டு வருகின்றன. இந்த பசுமைக்குடி தன்னார்வ அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான நரேந்திரன் கந்தசாமி, தான் இந்த ஊரில் இல்லாவிட்டாலும், நான் பிறந்த பூமி பசுமையாக்கிட பல்வேறு முயற்சிகளை அமெரிக்காவில் இருந்து செய்து வரும் நிலையில், தற்போது மற்றுமொரு முயற்சியாக தேக ஆரோக்கியம் நமது தேச ஆரோக்கியமாக கருதி மூன்று கிராமத்தில் கைப்பந்து குழுக்களை உருவாக்கி வருகின்றது இந்த பசுமைக்குடி தன்னார்வ அமைப்பு. தமிழக அளவில் இந்த அமைப்பினை பற்றி தெரியாதவர் யாரும் இருக்க முடியாது. இந்நிலையில், விளையாட்டு வீரர்களை உருவாக்கவும், ஒலிம்பிக் போட்டி வரை இளைஞர்கள் செல்ல வேண்டுமென்ற நோக்கில் கபாடியை தொடர்ந்து கைப்பந்தாட்டத்தினையும் வீரர்களையும் ஊக்குவிக்க, பசுமைக்குடி தன்னார்வ அமைப்பின் சொந்த செலவில் நெட் எனப்படும் வலைகளையும், கைப்பந்துகளையும் வீரர்களுக்கு கொடுக்கும் பணியினை தொடங்கி வருகின்றது. 

எதிர்கால நல்லுலகை கட்டமைக்கும் இளம் தலைமுறையினரை உருவாக்க நல்ல சுற்று சூழல் மிக அவசியம். அதே போல இளைஞர் நலன் சார்ந்த விஷயத்திற்கு விளையாட்டும் ஒரு முக்கிய பிரதானம். ஆக தேக ஆரோக்கியமே தேசத்தின் ஆரோக்கியம் என்று கருத்தில் கொண்டு  130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஒலிம்பிக்கில் நம்மால் எத்தனை பேரை நாம்மால் அனுப்ப முடிகிறது என்கின்ற வினா மட்டும் விடை தெரிந்தும் வினாவாக மட்டுமே தொடர்கிறது. ஆகையால் இத்தகைய சூழலில் கிராம புறத்தில் இளைஞர்கள் விளையாட்டின் மீதான ஆர்வம் கிரிக்கெட்டிலிருந்து மாறுபடுவது என்பதே மிக அரிதாகி போன சூழலில் கரூர் அடுத்த கடவூர் பகுதியில் உள்ள வரவணை கிராமத்தில் தமிழர்களின் வீர விளையாட்டான கபடி குழுக்கள் இருப்பதும், கபடி போட்டிகள் நடப்பதும் இன்றும் தொடர்ந்து வந்த நிலையில்., இதோ கரப்பந்தாட்ட குழுக்கள் பல இடங்களுக்கு சென்று பரிசு பெற்று வருவதும் வியப்புக்குரிய விஷயம் தான். தமிழர் விளையாட்டுக்களை ஊக்குவிக்கும் பொருட்டு, பொங்கல் விளையாட்டு போட்டிகளுக்கு கரூர் மாவட்ட அளவில் மட்டுமல்லாது பல பகுதிகளுக்கும் பரிசளிப்பு மூலம் பசுமைக்குடி தன்னார்வ அமைப்பு உதவி செய்து வந்த நிலையில் இதுவரை.,  தற்சமயம்  வீரமலைபாளையம் கிராமத்திற்கு கரப்பந்தாட்ட விளையாட்டு போட்டியினை ஊக்குவிக்க கரப்பந்துகள் மற்றும் வலை அளிக்கப்பட்டது. அதே போல., வரவணை கிராமத்திற்கும் இந்த போட்டியினை ஊக்குவிக்க கரப்பந்தாட்டதிற்கான பந்து மற்றும் வலை அளிக்கப்பட்டது. இதுமட்டுமில்லாமல், குளத்தூர் கிராமத்தில் உள்ள கரப்பந்தாட்ட குழுவிற்கும் இந்த பந்துகளும் வலைகளும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வாய்ப்பு கிடைக்கும் பகுதிகளால் மிக குறிப்பாக வரவணை ஊராட்சியில் தமிழர் விளையாட்டு குழுக்களை ஒருங்கிணைத்து  அதன் மூலம் இளைஞர்கள் உடல்நலம் பேணும் முயற்சியில் பசுமைக்குடி தன்னார்வ இயக்கம்  இப்புது முயற்சியின் மூலம் முயன்று வருகின்றதாக இதன் ஒருங்கிணைப்பாளர் நரேந்திரன் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பசுமைக்காக ஒரு மிகப்பெரிய புரட்சியினை மரங்கள் மற்றும் பனவிதைகளை நட்டு மிகவும் அற்புதமான நிகழ்ச்சிகளை பசுமைக்குடி தன்னார்வ இயக்கம் நடத்திய நிலையில் தற்போது இளைஞர்களின் ஆரோக்கியத்திற்காக கரப்பந்தாட்ட போட்டிகளிலும் தனது முழுக்கவனத்தினை தீவிரமாக செலுத்தி, இளைஞர்களை மிகப்பெரிய வீரர்களாக மாற்ற பசுமைக்குடி தன்னார்வ அமைப்பு உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த செயல் இளைஞர்களை மிகவும் ஊக்கப்படுத்தி வருகின்றது

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரத்தத்தில் பிரதமருக்கு கடிதம் எழுதிய விவசாயிகள் !