Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்னிபாத் திட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும்-முதல்வர் ஸ்டாலின்

Webdunia
சனி, 18 ஜூன் 2022 (19:24 IST)
மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இளைஞர்கள் போராட்டம் நடத்திவரும்  நிலையில், முதல்வர் ஸ்டாலின் அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெறுமாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மத்திய அரசு அறிவித்துள்ள 4 ஆண்டுகால குறுகிய கால ராணுவ பணி வழங்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. நேற்று முதலாக இந்தியா முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில் பீகாரில் பயணிகள் ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். உத்தர பிரதேசத்தில் போராட்டத்தில் காவலர்கள், போராட்டக்காரர்கள் இடையே வன்முறை வெடித்தது.

இந்நிலையில் இன்றும் நாடு முழுவதும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் தொடர்ந்து வருகிறது. நேற்று பீகாரில் ரயிலுக்கு தீ வைத்த நிலையில் இன்று தெலுங்கானாவின் செகந்திரபாத் ரயில் நிலையத்தில் நின்ற பயணிகள் ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று, சென்னையில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த இளைஞர்கள் தலைமைச் செயலகம் அருகே 2 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்,  மத்திய அரசு வெளியிட்டுள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  தேச நலனை கருத்தில்கொண்டு இளைஞர்களின் ராணுவப்பணி எனும் லட்சியத்தைச் சிதைக்கும் அக்னிபாத் திட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments