Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்னிபாத் விவகாரம்: சென்னையில் போராடிய இளைஞர்கள் கைது!

Webdunia
சனி, 18 ஜூன் 2022 (17:25 IST)
மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு த்ரிவித்து சென்னையில் இளைஞர்கள் போராட்டம் நடத்திவரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

மத்திய அரசு அறிவித்துள்ள 4 ஆண்டுகால குறுகிய கால ராணுவ பணி வழங்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. நேற்று முதலாக இந்தியா முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில் பீகாரில் பயணிகள் ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். உத்தர பிரதேசத்தில் போராட்டத்தில் காவலர்கள், போராட்டக்காரர்கள் இடையே வன்முறை வெடித்தது.

இந்நிலையில் இன்றும் நாடு முழுவதும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் தொடர்ந்து வருகிறது. நேற்று பீகாரில் ரயிலுக்கு தீ வைத்த நிலையில் இன்று தெலுங்கானாவின் செகந்திரபாத் ரயில் நிலையத்தில் நின்ற பயணிகள் ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது, டெல்லி மெட்ரோவின் 3 ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் சுமார் 200 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது, 35 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 13 ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சென்னையில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த இளைஞர்கள் தலைமைச் செயலகம் அருகே 2 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ திட்டத்தை டெல்லி நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: ராமதாஸ்

நவீன் பட்நாயக் வலது கையாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் மனைவி ராஜினாமா..!

வக்பு வாரிய மசோதா விவாதத்தில் கலந்து கொள்ளாத ராகுல் காந்தி: குவியும் கண்டனங்கள்..!

செலவு கோடி ரூவாப்பே.. ஆனால் கோவில் நிலையோ பரிதாபம்! - காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை!

வருஷம் 3 கோடி சம்பளம்.. வீடு, கார் சகல வசதிகளும்..! ஆனா யாரும் வரமாட்றாங்க! - ஆஸ்திரேலியாவில் ஒரு விநோத பகுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments