Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆன்லைன் சூதாட்டம் - பணிகள் குறித்து அரசாணை!!

Advertiesment
ஆன்லைன் சூதாட்டம்  - பணிகள் குறித்து அரசாணை!!
, ஞாயிறு, 12 ஜூன் 2022 (09:36 IST)
ஆன்லைன் சூதாட்டம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவுக்கான பணிகள் குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

 
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட செயலிகளில் மக்கள் பலர் பணத்தை இழந்து வருவதும், பலர் தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கதையாகி வருகிறது. இதை தடுக்க கடந்த அதிமுக ஆட்சியின்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை விதித்து சட்டம் கொண்டுவரப்பட்டது.
 
ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இந்த சட்டம் சரியானதாக இல்லை என மீண்டும் வலுவான சட்டம் அமைக்குமாறு கூறி ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. சூதாட்ட செயலிகளை தடை செய்வதில் தமிழ்நாடு அரசு தீவிரமாக உள்ளது.
 
இந்நிலையில் சூதாட்ட செயலிகளை தடை செய்வதற்கு சரியான ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் சிறப்பு குழவை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். 
 
இதனைட்தொடர்ந்து தற்போது ஆன்லைன் சூதாட்டம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவுக்கான பணிகள் குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஆன்லைன் விளையாட்டு தொடர்பான விளம்பரங்களை தடை செய்வது எவ்வாறு என்பது குறித்தும் இந்த குழு ஆராய வேண்டும். ஆன்லைன் விளையாட்டுக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் நிதி இழப்புகள் குறித்தும் ஆராய வேண்டும். 
 
இணையவழி பணபரிவர்த்தனை எந்த அளவுக்கு கட்டுப்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆராய வேண்டும். ஆன்லைன் விளையாட்டு தடை செய்வது தொடர்பான சட்ட மசோதாவை உருவாக்குவதற்கான காரணங்களை தெளிவுபடுத்த வேண்டும் என 7 விவகாரங்கள் குறித்து இந்த குழு ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடியரசு தலைவர் தேர்தல்: பொது வேட்பாளரை நிறுத்த மம்தா பானர்ஜி திட்டம்