Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வேசுக்கோ, தீசுக்கோ என்ற கோஷங்களுடன் சவுடேஸ்வரி அம்மனுக்கு கத்தி போடும் திருவிழா!!!

Advertiesment
வேசுக்கோ, தீசுக்கோ என்ற கோஷங்களுடன் சவுடேஸ்வரி அம்மனுக்கு கத்தி போடும் திருவிழா!!!

J.Durai

, சனி, 12 அக்டோபர் 2024 (15:45 IST)
கோவை, டவுன்ஹால் பகுதியில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும்  விஜயதசமி நாளில் அம்மனை அழைப்பதற்காக கோவிலுக்கு வரும் பக்தர்கள் கத்தி போடும் திருவிழா நடைபெற்றது.
 
கோவை சாய் பாபா காலணி உள்ள விநாயகர் கோவிலில் இன்று காலை எட்டு மணி அளவில் கத்தி போடும் திருவிழா ஊர்வலம் தொடங்கியது.
இதில் 500 - க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு வேசுக்கோ, தீசுக்கோ கோஷங்கள் எழுப்பினர்.
 
இந்த ஊர்வலமானது சுமார் 400 ஆண்டுகளாக பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருவதாக கூறுகின்றனர். ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் வேசுக்கோ, தீசுக்கோ என்று பாடிக் கொண்டும், ஆடிக்கொண்டும் கத்தியால் கைகளில் வெட்டிக் கொண்டே அம்மனை அழைத்தனர்.
 
இதனால் பக்தர்களின் உடலில் ரத்தம் வழிந்து ஓடியது. வெட்டுக் காயங்களின் மீது திருமஞ்சனப் பொடியை வைத்துக் கொண்டு, ஆடிக் கொண்டே சென்றனர். இந்த திருமஞ்சன பொடியை வைத்தால் 3 நாட்களில் காயம் சரியாகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
 
ஊர்வலமானது முக்கிய வீதிகள் வழியாக வந்து டவுன்ஹாலில் உள்ள சௌடேஸ்வரி கோவில் வந்தடையும். தொடர்ந்து அம்மனுக்கு விசேஷ பூஜை, திருக்கல்யாணமும் நடைபெறும். இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கத்தி போடும் திருவிழாவை பார்த்து பரவசம் அடைந்தனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ஸ்ரீ பிரஸன்ன வேங்கடேஸப் பெருமாள் திருக்கோயிலில் 108 வீணை இசை வழிபாடு.....