Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தான் ஏதாவது ஒரு பிரபல நிறுவனங்களுக்குவேலைக்கு பரித்துரை கடிதம் கொடுத்தால், நுழைவு வாயிலுக்குள்ளேயே விட மாட்டார்கள்- அமைச்சர் சி.வி.கணேசன்!

Advertiesment
Minister CV Ganesan

J.Durai

, திங்கள், 23 செப்டம்பர் 2024 (13:05 IST)
கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள ரத்தினம் கல்லூரியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டு துறை சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. 
 
இதில் கலந்து கொண்ட அமைச்சர் சி.வி கணேசன் வேலைவாயப்பு உறுதி செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை  வழங்கினார். 
 
இந்த வேலைவாய்ப்பு முகாமில் சுமார் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.
 
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சி.வி கணேசன்.....
 
நல்ல கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் தரம் வளர்ந்தால் மட்டும்தான் நாட்டில் பொருளாதார வளர்ச்சியடையும்.
 
சிறிய வயது குழுந்தை மாதிரி, பால்வடிந்த முகம் மாதிரி தோற்ற பொழிவு கொண்ட மாவட்ட ஆட்சியர்  இந்த மாவட்ட ஆட்சியரை, பார்த்தால் பார்த்து விட்டு கேட்க வந்ததையே மறந்து விடுவார்கள்  நல்ல ஆளுமையான, திறமையாக, நிர்வாகம் நடத்தக்கூடிய  மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரத்தை சரியாக பயன்படுத்த கூடிய மாவட்ட ஆட்சியர் 
 
படித்தால் வேலை கிடைக்காது என்பது அவநம்பிக்கை  முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு
238 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி 2,00,7000 பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி இருக்கிறோம் இதுவரை 5 லட்சம்  பேருக்கு தனியார் வேலைவாய்ப்புக்கு வழங்கிய ஆட்சி முதல்வருடைய ஆட்சி,முதல்வர் தமிழ்நாடு அரசு துறையில் 75,000 காலிப்பணியிடங்கள நிறப்புவதாக வாக்குறுதி அளித்திருக்கிறது.
சொன்னதை செய்து காட்டக்கூடிய முதலமைச்சர்.
 
முதன்முதலில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான் சேப்பாக்கம் தொகுதியில் வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்தார். அப்போது எனக்கு வேலைவாய்பு முகாம் என்ன என்பதே தெரியாது. அவருடன் சென்று என்ன செய்கிறார் என பார்த்துதான் கற்றுக்கொண்டேன்  எப்படியாவது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் என துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது  கூட்டு முயற்சி இருப்பதால் துறையில் மிக வேகமாக வளர்ச்சி கொண்டிருக்கிறது.
 
ஒரு இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தனக்கு வேலை வேண்டும் என கேட்டு வருகிறார்  என்றால்,  நாடாளுமன்ற உறுப்பினர் தன்னிடம் அனுப்பிவார் எனவும் தானும் ஒரு பிரபல  நிறுவனத்திற்கு கடிதம் கொடுததால், அங்கே சென்றால் அவர்கள்  அந்த இளைஞரை நுழைவு வாயிலுக்குள்ளே கூட விட மாட்டார்கள், அவர்களைப் பாருங்கள், இவர்களை பாருங்கள் என அலைக்கழிப்பார்கள். அதற்குள் அந்த இளைஞர் படாத பாடு பட்டு விடுவார், ஒருவேளை எம்பி சிபாசிரிசில் அந்த இளைஞர் வேலைக்கு சேர்ந்து விட்டால், இரண்டு மூன்று மாதத்தில் அந்த வேலை பிடிக்கவில்லை என்றால் அந்த வேலையை விட்டு வந்துவிடலாம் அல்லது ஊதியம் போதவில்லை என யோசிப்பார், இது போன்ற பல கஷ்டங்கள் அவருக்கு இருக்கும், ஆனால் இது போன்ற  கஷ்டங்களை எளிமையாக்கத்தான் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது.
 
வேலை கிடைக்காதவர்கள் அச்சப்பட வேண்டாம் வேலை இல்லை என்ற சொல்லை போக்க வேண்டும் என முதல்வர் வெளிநாட்டுக்கு சென்று வந்து புதிய தொழிற்சாலைகளை திறந்து கொண்டே இருக்கின்றார்.
 
மேலும் மாணவர்கள் முதலில் தைரியமாக இருக்க வேண்டும் இயக்குநர் சுந்தரவல்லி போன்றவர்கள் நமக்கு ரோல் மாடலாக எடுத்து கொள்ள வேண்டும், வெற்றி பெற்ற மனிதர்களை பார்த்து பழகுங்கள், தோல்வியடைந்தவர்களை பார்க்காதீர்கள் எதிர்மறை சிந்தனைகளை மனதில் இருந்து எடுத்திட வேண்டும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
 
இந் நிகழ்ச்சியை தொடர்ந்து  அமைச்சர் சி.வி கணேசனிடம், சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்:
 
ஆனால் அதற்கு அமைச்சர் சி.வி கணேசன் பதிலளிக்காமல் காரில் எறிச்சென்றார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“கரிஷ்மா” கலைத்திறன் போட்டியில் பிக் பாஸ் புகழ் மணிச்சந்திரா கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்!