Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா சிகிச்சை: தனியார் மருத்துவமனை கட்டணம் எவ்வளவு..?

Advertiesment
கொரோனா சிகிச்சை: தனியார் மருத்துவமனை கட்டணம் எவ்வளவு..?
, வியாழன், 4 ஜூன் 2020 (10:31 IST)
கொரோனாவுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை தந்து கொண்டிருக்கும் நிலையில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கான சிகிச்சைக் கட்டணம் மிக அதிகமாக இருப்பதாகவும் இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கடந்த சில நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்
 
இந்த நிலையில் விரைவில் தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. அந்த வகையில் தற்போது ஐ.எம்.ஏ தமிழக பிரிவு கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது குறித்து அறிவிப்பு செய்துள்ளது 
 
லேசான பாதிப்பு உள்ள ஒரு நோயாளிக்கு 10 நாட்கள் சிகிச்சை கட்டணமாக ரூபாய் 2,31,820 வசூலிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. அதேபோல் தீவிர சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் கட்டணமாக ரூபாய் 4,31,411 என நிர்ணயம் செய்து உள்ளது. இருப்பினும் ஐ.எம்.ஏ நிர்ணயம் செய்துள்ள இந்த தொகை மிக அதிகமாக இருப்பதாக சமூகவலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க வசதி இல்லாத பள்ளி மாணவி தற்கொலை