Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நள்ளிரவில் மின்கம்பியில் தொங்கியபடி பொதுமக்களை பதற வைத்த எலக்ட்ரீசியன்

நள்ளிரவில் மின்கம்பியில் தொங்கியபடி பொதுமக்களை பதற வைத்த எலக்ட்ரீசியன்
, சனி, 24 பிப்ரவரி 2018 (11:23 IST)
ஈரோட்டில் எலக்ட்ரீசியன் ஒருவர் நள்ளிரவில் மின்கம்பியில் தொங்கியபடி அங்குமிங்குமாய் சுற்றியதால் அப்பகுதிவாசிகள் அச்சத்தில் உறைந்தனர்.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ஐரிங்(50). இவர் ஒரு எலக்ட்ரீசியன்.  இவரது மனைவி சித்ரா. சித்ரா பொள்ளாச்சியை சேர்ந்தவர். இவர்களுக்கு சைனி(9), லைலோனி(12) என இரு மகள்கள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சித்ரா கணவரை பிரிந்து கோவையில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். 
 
இந்நிலையில் ஐரிங்கின் இரு மகள்களும் தாயை பார்க்க வேண்டும் என்று கூறியதால், ஐரிங் பெங்களூருவிலிருந்து தனது 2 மகள்களையும் அழைத்து கொண்டு பொள்ளாச்சிக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.
 
ஈரோட்டில் இறங்கிய ஐரிங் திடீரென, அப்பகுதியில் உள்ள ஒரு மின் கம்பத்தில் வேகமாக ஏறினார். இதைபார்த்த பொது மக்கள் உடனடியாக மின் ஊழியர்களுக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். உடனடியாக மின்ஊழியர்கள் அந்த பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் ஐரிங்கை  பத்திரமாக மீட்டனர்.
 
போலீசார் நடத்திய விசாரணையில் ஐரிங் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்தது. இதனையடுத்து ஐரிங்கின் உறவினர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்களிடம் ஐரிங் மற்றும் அவரது 2 மகள்களும் ஒப்படைக்கப்பட்டனர். இச்சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக பொருளாளர் பதவி ஆர்.ராசாவுக்கு? - மு.க.ஸ்டாலின் திட்டம் என்ன?