Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முகம் இல்லாமல் பிறந்த குழந்தை ... அலட்சியமாக இருந்த மருத்துவர் நீக்கம் !

முகம் இல்லாமல் பிறந்த குழந்தை ... அலட்சியமாக இருந்த மருத்துவர் நீக்கம் !
, வெள்ளி, 25 அக்டோபர் 2019 (20:50 IST)
போர்ச்சுகல் நாட்டில் செதுபால் என்ற நகரத்தில் உள்ள மருத்துவர் உள்ள மருத்துவமனையில் ஒரு பெண் பிரசவ வலியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவ
ருக்கு பிறந்த குழந்தையைப் பார்த்ததும் மருத்துவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
 
போர்ச்சுக்கள் நாட்டில் உள்ள செதுபால் என்ற இடத்தில், ஒரு மருத்துவமனையில், கடந்த 7 ஆம் தேதி பெண் ஒருவருக்கு பிரவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
 
அவருக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் அந்தக் குழந்தையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஆம். அந்த குழந்தையின் முகத்தில் எந்த உறுப்புகளுமே இல்லாததைக் கண்டு தான் இந்த அதிர்ச்சி.
 
அதாவது, அவரது மண்டையோட்டின் ஒரு பகுதிகூட  வளர்ச்சியடையாத நிலையில், பெண்ணுக்கு பிரசவம் நடைபெற்றுள்ளது. குறிப்பாக, பெண்ணுக்கு மருத்துவர் 3 முறை  வயிற்றில் ஸ்கேன் செய்து பார்த்தும் குழந்தை வளர்ச்சி அடையாததைக் கண்டுபிடிக்கவில்லை. 
 
ஏற்கனவே கர்ப்ப காலத்தில் ஆறாவது மாதத்தில் பெண்ணுக்கு வயிற்றில் ஸ்கேன்  செய்து பார்க்கப்பட்டது. அந்த சமயத்தில் கூட குழந்தை குறை பிரசவத்தில், பிறக்குமா என சந்தேகம் எழுப்பட்ட நிலையில்  அதுபோல் நடக்காது என மருத்துவர் கூறியுள்ளதாகத் தெரிகிறது.

இந்த நிலையில் , இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் ரசிகர் ஏற்படுத்திய விபத்தில் 2 வயது குழந்தை மரணம்