Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரோபோட்டுகளுக்கு உங்கள் முகம்; 91 லட்சம் பணம் – நூதன அறிவிப்பு!

Advertiesment
ரோபோட்டுகளுக்கு உங்கள் முகம்; 91 லட்சம் பணம் – நூதன அறிவிப்பு!
, வெள்ளி, 25 அக்டோபர் 2019 (17:54 IST)
பெயரிடப்படாத ரொபாட்டிக் நிறுவனம் ஒன்று தங்கள் ரோபோட்டுகளுக்கான முகங்களை தேடி வருகிறது.

பெயரிடப்படாத ரொபாட்டிக் நிறுவனம் ஒன்று ஜியோமிக் என்ற நிறுவனத்துடன் இணைந்து மனித வடிவிலான ரோபோக்களை தயாரித்து வருகிறது. இந்த ரோபோக்களுக்கு உண்மையான மனிதர்களின் முகத்தையே பயன்படுத்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.

இதற்காக ஜியோமிக் தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் எங்களுக்கு குணமான மற்றும் நட்பான முகங்கள் தேவை. தேர்வு செய்யப்படும் முகங்களுக்கு 1 லட்சம் பவுண்டு (இந்திய மதிப்பில் 91 லட்சம் ரூபாய்) தருவதாகவும் அறிவித்துள்ளது. இதற்காக புகைப்படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரியையும் தந்திருக்கிறார்கள்.

ஆனால் இதுகுறித்து ரொபாட்டிக் துறையில் உள்ள வேறு சிலர் கூறுகையில் நாம் அறியாத ரோபோட் ஒன்று நமது உருவில் திரிவது நமக்கே அபாத்தானதாக ஆகலாம் என்று கூறியுள்ளனர். எனினும் மக்கள் சிலர் இதில் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிகில் - 4 திரையரங்குகளில் 4 நாட்களாக ஹவுஸ் புல் ...கருப்பு வேஷ்டி சட்டையில் ரசிகர்கள் ஆட்டம் பாட்டம்