Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறுவன் உயிரிழந்திருப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது - நடிகர் சரத்குமார்

Advertiesment
சிறுவன்  உயிரிழந்திருப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது - நடிகர் சரத்குமார்
, திங்கள், 3 ஜனவரி 2022 (23:46 IST)
சிறுவன் புகழேந்தி மீது தோட்டா பாய்ந்ததில்,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்திருப்பது மிகுந்த மனவேதனையளிக்கிறது என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
 
அப்போது திடீரென அந்த பக்கம் அந்த சிறுவனின் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது இதனை அடுத்து அந்த சிறுவன் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன் அந்த சிறுவன் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார் புதுக்கோட்டை சிறுவனின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் இழப்பீடு தர உத்தரவிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், சிறுவன் உயிரிழந்துள்ளது குறித்து நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில், புதுக்கோட்டையில் சிஐஎஸ்எப் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது,  குறி தவறி துரதிர்ஷ்டவசமாக சிறுவன் புகழேந்தி மீது தோட்டா பாய்ந்ததில்,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்திருப்பது மிகுந்த மனவேதனையளிக்கிறது.

தகுந்த பாதுகாப்புடன் துப்பாக்கி சுடும் பயிற்சி தளங்கள் செயல்படுவதை அரசு உறுதி செய்து, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அப்பாவி சிறுவன் புகழேந்தி மறைவால் வேதனையில் வாடும் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தெலங்கானா மாநில பாஜக தலைவர் கைது !