Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் சரத்குமார் பிறந்தநாள்! குவியும் வாழ்த்துகள்

Advertiesment
நடிகர் சரத்குமார் பிறந்தநாள்!  குவியும் வாழ்த்துகள்
, செவ்வாய், 13 ஜூலை 2021 (22:24 IST)
தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சரத்குமார். இவர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான கேப்டன் பிரபாகரன் என்ற படத்தில் அறிமுகமானார். இப்படத்தை ஆர்.கே. செல்வமணி இயக்கினார்.

அதன்பின் சூரியன், சூரியவம்சம்,  நாட்டாமை, திவான், வேடன்,  அரவிந்தன்,  ஐயா உள்ளிட்ட படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோடீஸ்வரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

பின்னர், சமத்துவ மக்கள் கட்சியை நிறுவி அதன் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார். சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அதிமுகவில் இருந்து விலகி கமல்ஹாசனின் மநீம கட்சியுன் கூட்டணி வைத்தார்.

இந்நிலையில் நாளை தனது 67 வது பிறந்தநாள் கொண்டாடவுள்ள நடிகரும் சமக தலைவருமான  சரத்குமாருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

9 years of பில்லா ..அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்