Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதுக்கோட்டையில் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன் உயிரிழப்பு

Advertiesment
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் காவலர் பயிற்சி மையத்திலிருந்து துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன் புகழேந்தி உயிரிழப்பு. 

 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுக்கோட்டை மாவட்டம் பசுமலைப்பட்டியில் காவலர் பயிற்சி மையத்திலிருந்து துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். தஞ்சை அரசு மருத்துவமனையில் கடந்த 31ஆம் தேதி 4 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் சிறுவனின் தலையிலிருந்த குண்டு அகற்றப்பட்டது. 
 
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அந்த சிறுவன் கவலைக்கிடமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. தற்போது தலையில் துப்பாக்கி குண்டால் காயம்ப்பட்டு தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் புகழேந்தி உயிரிழந்தான். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஜேந்திர பாலாஜி வழக்கறிஞர் வீட்டில் வாரண்ட் இல்லாமல் சோதனை: நீதிமன்றத்தில் வழக்கு!