Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலிக்குமாறு சிறுமியை அடித்து மிரட்டிய கொடூரன்!

Webdunia
திங்கள், 20 மே 2019 (17:31 IST)
தன்னைக் காதலிக்க வேண்டும்  என வலியுறுத்தி சிறுமியைத் தாக்கிய வாலிபனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை புழல் அடுத்த விநாயகபுரம் கல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் ( 18). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
 
இந்நிலையில் லட்சுமிபுரம் செகரெட்டரியேட் காலனியில் வசித்து வந்த 17 வயது சிறுமியிடம் தன்னைக் காதலிக்க வேண்டும் என்று தொல்லை கொடுத்துள்ளான்.
 
நேற்று முன்தினம் மாலையில் அந்த சிறுமியை வழிமறித்து தன்னைக் காதலிக்க வேண்டும் என மிரட்டியுள்ளான்.  அதற்கு சிறுமி மறுக்கவே அவளை அடித்து துன்புறுத்தியுள்ளான்.
 
மேலும் தன்னை காதலிக்க வேண்டும் இல்லை என்றால் பணம் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளான். இதனையடுத்து சிறுமியின் தந்தை போலீஸில் புகார் அளித்த நிலையில் நேற்று காலையில்  போலீஸார் சந்தோஷ் குமாரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments