Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவில் இருந்து திடீரென விலகும் பிரபலம்: அதிர்ச்சியில் ஓபிஎஸ்-ஈபிஎஸ்

Webdunia
திங்கள், 20 மே 2019 (17:11 IST)
மக்களவை மற்றும் 22 சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து இன்னும் மூன்று நாட்களில் முடிவுகள் வெளிவரவுள்ள நிலையில் அதிமுகவின் முக்கிய பிரபலம் ஒருவர் கட்சி பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். அவர் விரைவில் கட்சியில் இருந்தும் விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர்களின் தரப்பு அதிர்ச்சியில் அடைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியின் எம்.எல்.ஏவாகவும், அம்மா பேரவை மாநில இணைச் செயலாளராக உள்ள தோப்பு வெங்கடாசலம் திடீரென கட்சி பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். மேலும் கட்சி பொறுப்பில் இருந்து மட்டுமின்றி விரைவில் கட்சியில் இருந்தும் விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஏற்கனவே தோப்பு வெங்கடாசலம், தினகரனின் ஆதரவாளர் என்ற முத்திரை குத்தப்பட்டிருந்த நிலையில் அவருக்கும், அவருடைய ஆதரவாளர்களுக்கும் கட்சியில் எந்தவித முக்கியத்துவமும் தரப்பாடமல் இருந்தது. இந்த நிலையில் சற்றுமுன் கட்சிப்பொறுப்பில் இருந்து விலகிய தோப்பு வெங்கடாசலம் விரைவில் தினகரனின் அமமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் ரூ.480 குறைந்தது தங்கம் விலை.. இன்னும் குறையுமா?

ஒரே ஒரு புயல்.. மொத்த தண்ணீர் கஷ்டமும் தீர்ந்தது.. ஏரிகளின் கொள்ளளவு நிலவரம்..!

வைகை, பல்லவன், வந்தே பாரத் ரயில்கள் ரத்து.. பயணிகள் கடும் அதிருப்தி..!

வாரத்தின் முதல் நாளே அதிர்ச்சி.. இறங்கி வரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

தரிசனத்திற்கு வரும் பிரபலங்கள் அரசியல் பேசக்கூடாது: திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments