Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இறுதிச் சடங்கின் போது உயிருடன் இருந்த குழந்தை : மருத்துவர்களின் அலட்சியமா ?

Advertiesment
இறுதிச் சடங்கின் போது உயிருடன் இருந்த  குழந்தை : மருத்துவர்களின் அலட்சியமா ?
, செவ்வாய், 1 அக்டோபர் 2019 (20:03 IST)
தஞ்சாவூர் மாவட்டம் வயலூரில் வசித்து வந்தவர் பாஸ்கரன் இவரது மனைவி பிரீத்தி. இந்த தம்பதிக்கு கெவின் என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில் திடீரென்று கெவினுக்கு காய்ச்சல் வரவே,குழந்தையைத் தூக்கிக்கொண்டு  பெற்றோர் இருவரும் தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாகக் கூறிவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், கண்ணீருடன் கதறி அழுத வண்ணமாகவே, இறுதிச்சடங்குக்கு ஏற்பாடு செய்தனர்.
 
அப்போது, குழந்தை சவப்பெட்டியில் அசைவது போல் தெரிந்துள்ளது. அதைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட பெற்றோர், மீண்டும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.பின்னர் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் சில நிமிடங்களுக்கு முன் இறந்ததாகக் கூறியுள்ளனர்.
 
அதனால் ஆத்திரம் அடைந்த இறந்த  குழந்தையின் பெற்றோர், குழந்தை இறந்ததற்கு மருத்துவர்களின் கவனக் குறைவே காரணம் என்று கூறி மருத்துவமனை முன்பு போரட்டம் நடத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாயின்றி அழைந்த யானைக்குட்டி: பத்திரமாக தாயிடம் சேர்த்த அதிகாரிகள் – வைரல் வீடியோ