சென்னையில் உள்ள அரசு மருத்துவனைகளில் இது வரை 50 க்கும் மேற்பட்டோர், டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஆங்காங்கே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 3 பேர் டெங்கு அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில் சென்னையில் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக 60 பேர் சிகிச்சைக்கு அன்மதிக்கப்ப்ட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழகத்தில் காய்சல் பாதிப்பு காரணமாக 401 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.