Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசைக்கு இணங்காத சிறுவனை அடித்து கொன்ற கொடூரன்

Webdunia
புதன், 29 மே 2019 (10:55 IST)
திருநெல்வேலி மாவட்டத்தின் தாழையூத்து பகுதியில் சிறுவனுடன் ஓரினசேர்க்கைக்கு முயன்று, அதற்கு உடன்படாததால் அந்த சிறுவனை அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாழையூத்து பகுதியில் கூலி வேலை செய்யும் தளவாய் என்பவரின் இளைய மகன் கொம்பையா. 3-ம் வகுப்பு படிக்கும் கொம்பையா விடுமுறை நாள் என்பதால் ஊரின் பல பகுதிகளுக்கும் நண்பர்களோடு சேர்ந்து விளையாட போவது வழக்கம். அதேபோல் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நண்பர்களுடன் விளையாட போன கொம்பையா திரும்ப வரவேயில்லை. ஊரெங்கும் தேடிபார்த்த பெற்றோர் கடைசியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று நாரணம்மாள்புரம் அருகே உள்ள முட்புதரில் கொம்பையா கொல்லப்பட்டு கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சிறுவனை கொன்றது யார் என்று போலீஸார் விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர். கொம்பையாவுடன் விளையாடிய மற்ற சிறுவர்களிடம் விசாரித்தபோது அந்த ஊரை சேர்ந்த மாயாண்டி என்பவர் கொம்பையாவை அழைத்து சென்றது தெரிய வந்தது. மாயாண்டியை பிடித்து போலீஸார் விசாரிக்க தொடங்கியிருக்கின்றனர். குற்றத்தை ஒப்புக்கொண்ட மாயாண்டி சம்பவத்தன்று கொம்பையா விளையாடி கொண்டிருந்ததாகவும் அவனை பேச்சு கொடுத்துக்கொண்டே ஒரு புதருக்குக்குள் அழைத்து சென்று அவனோடு ஓரினசேர்க்கைக்கு முயற்சித்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சிறுவன் அவருடைய இந்த தவறான நடவடிக்கைக்கு உடன்படவில்லை. இதை தனது பெற்றோரிடம் சொல்ல போவதாகவும் மிரட்டியுள்ளான். இதில் ஆத்திரமடைந்த மாயாண்டி அங்கிருந்த ஒரு பெரிய கல்லை எடுத்து கொம்பையாவை அடித்தே கொன்றிருக்கிறார். பிறகு பிணத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடியிருக்கிறார்.

தற்போது போலீஸார் மாயாண்டியை கைது செய்து காவலில் வைத்துள்ளனர். இந்த சம்பவம் தாழையூத்து பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments