சாம்சங் தொழிலாளர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்ற அந்நிறுவனம் முன்வந்துள்ளது என்றும், சிஐடியூ தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. எனவே, போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் சாலை விபத்தின் போது அங்கு வந்த காவலர்களை தாக்கியவர்களே கைது செய்யப்பட்டனர். அவர்கள் யாரும் ரிமாண்ட் செய்யப்படவில்லை. சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டனர் என்றும் கைது நடவடிக்கை குறித்தும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
மேலும் சாம்சங் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த 3 அமைச்சர் கொண்ட குழு அமைக்கப்பட்டதாகவும், பேச்சுவார்த்தை காரணமாக சாம்சங் நிறுவனம் பல்வேறு கோரிக்கைகளை ஏற்க முன் வந்துள்ளதாகவும், சம்பளத்துடன் சிறப்பு ஊக்கத்தொகை மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், பணிக்காலத்தில் தொழிலாளர்கள் உயிரிட நேர்ந்தால் சிறப்பு நிவாரணத் தொகை ஒரு லட்சம் ரூபாய் உடனடியாக வழங்கப்படும், அனைத்து தொழிலாளர்கள் சென்று ஏ.சி. பேருந்து வசதி செய்த தரப்படும், உணவு உள்ளிட்ட பல்வேறு வசிதிகள் மேம்படுத்த சாம்சங் நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.