ஆசியாவில் உள்ள ஏராளமான ஊழியர்களை வேலைநீக்கம் செய்ய சாம்சங் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசியாவில் உள்ள தங்கள் கிளைகளில் பணிபுரியும் ஊழியர்களை வேலைநீக்கம் செய்ய சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் 10ல் ஒருவர் வேலை இழக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வரும் தென் கொரியாவின் சாம்சங் நிறுவனம், இந்தியாவில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் உற்பத்தி கூடங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், இந்தியா உள்பட ஆசியாவின் சந்தை பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட பகுதிகளில் வேலைநீக்கம் நடவடிக்கையை மேற்கொள்ள சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த செய்தி ஊடகங்களில் பரவி வரும் நிலையில், பொதுவான வேலை நீக்க நடவடிக்கைதான் எடுக்கப்படுகிறது என்றும், ஒரு குறிப்பிட்ட பகுதியில் இலக்கு வைத்து வேலை நீக்கம் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் சாம்சங் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனத்தில் 2.67 லட்சம் ஊழியர்கள் பணி செய்து வரும் நிலையில், இவர்களில் 10% பேர் வேலை இழக்கலாம் என்று கூறப்படுகிறது.