மறைந்த நடிகர் மற்றும் அரசியல் தலைவரான விஜயகாந்தின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோல், தமிழக வெற்றி கழகத்தின் ஆதரவாளரான தாடி பாலாஜி, செய்தியாளர்களிடம் விஜயகாந்த் குறித்து பேசினார்.
"இன்று ஒரு சிறந்த தலைவரின் பிறந்தநாள். அவர் மறைந்திருந்தாலும், நம்மிடையே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார் என்று நான் நம்புகிறேன்.
விஜயகாந்துக்கு கட்சியும் வாரிசுகளும் இருக்கும்போது, விஜய்யின் ஆதரவாளர்கள் ஏன் விஜயகாந்தின் பெயரைப் பயன்படுத்தி அரசியல் செய்ய வேண்டும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தாடி பாலாஜி, "செந்தூரப்பாண்டி திரைப்படத்தில்தான் விஜயகாந்த், விஜய்க்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தார். விஜய்யின் தந்தையும் இதை பற்றி பேசியிருக்கிறார். மேலும், விஜய், விஜயகாந்தை அண்ணன் என்றுதான் அழைக்கிறார். அதனால், விஜயகாந்த் குறித்து விஜய் பேசியதில் எந்த தவறும் இல்லை" என்றார்.
விஜய், விஜயகாந்த்தை முன்னிறுத்தி அரசியல் செய்வதாக எனக்கு தெரியவில்லை" என்றும் அவர் விளக்கினார்.
விஜயகாந்தின் இடத்தை விஜய் நிரப்புவாரா?" என்று செய்தியாளர்கள் மீண்டும் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தாடி பாலாஜி, "மக்கள் மனது வைத்தால், விஜயகாந்தின் இடத்தை விஜய் பூர்த்தி செய்வார்" என்று நம்பிக்கையுடன் கூறினார்.