திமுக தொண்டர்கள் தேனாம்பேட்டையில் உள்ள அறிவாலயத்தில் கூடியதால் பரபரப்பான சூழல் உருவானது.
கொரோனா பரவல் உச்சத்தில் உள்ள நிலையில் தேர்தல் வெற்றிகளைக் கொண்டாட வேண்டாம் என திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே தங்கள் தொண்டர்களுக்கு அறிவித்திருந்தனர். இந்நிலையில் திமுக கூட்டணி முன்னணியில் இருக்கும் நிலையில் தொண்டர்கள் அனைவரும் கட்சி அலுவலகமான தேனாம்பேட்டையில் கூடினர். அவர்களை அடக்க தவறிவிட்டதாக தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் முரளியை முன்னேற்பாடு நடவடிக்கைகள் என்று கூறி தேர்தல் ஆணையம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. அதன் பின்னர் அறிவாலய ஊழியர்கள் ஒலிப்பெருக்கியில் அறிவித்து அங்கிருந்த தொண்டர்களை கலைந்து போக வைத்தனர்.