Publish Date: Thu, 29 Apr 2021 (17:58 IST)
Updated Date: Thu, 29 Apr 2021 (18:00 IST)
வேலூரில் பிரபல தனியார் ஜவுளிக் கடை ஒன்றில் ஊரடங்கை மீறி வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பெரிய ஜவுளிக்கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூரில் தடையை மீறி ஒரு ஜவுளிக்கடையில் பின்பக்கமாக வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையறிந்த மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று கடையை மூடி ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர்.