Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மோடி, அமித் ஷாவுக்கு ஓய்வளிக்க வேண்டும்! சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்

Advertiesment
சுப்ரமணியன் சுவாமி

Mahendran

, வியாழன், 24 ஏப்ரல் 2025 (10:24 IST)
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பெஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நாடெங்கிலும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ஓய்வளிக்க வேண்டுமென பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
 
இது தொடர்பாக அவர் கூறியதாவது: “பாஜகவுக்கு எதிர்காலத்தில் ஆட்சியை தொடரும் வாய்ப்பு இருக்க வேண்டுமெனில், தற்போதைய தலைமையில் இருப்பவர்கள்  நிர்வாகத்திலிருந்து விலக வேண்டும். கடந்த கால அரசியல் தலைவர்கள் ஓய்வெடுத்ததை போலவே, இவர்கள் இருவரும் அரசியல் ஓய்வை ஏற்கவேண்டும்” என தெரிவித்துள்ளார்.
 
 பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர்களுக்கு எதிராக அவ்வப்போது சுப்பிரமணியன் சுவாமி தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகிறார் என்பதும் ஆனால் அவரது பதிவை பாஜகவில் உள்ள யாரும் கண்டு கொள்வதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
அதைப்போல தான் மோடியும் அமித்ஷாவும் ஓய்வெடுக்க வேண்டும் என்பதை யாரும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். அவருடைய கருத்துக்களுக்கு எதிர் கருத்து கூட பாஜக தரப்பிடமிருந்து இதுவரை வெளிவந்ததில்லை என்பதும் எதிர்க்கட்சிகள் மட்டுமே அவர் கூறும் கருத்துக்களை வைரல் ஆக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உன்னை கொல்ல போகிறோம்.. கௌதம் காம்பீருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் மிரட்டல் மின்னஞ்சல்..!