Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோயில் காசில் கல்லூரி! எடப்பாடி பழனிசாமியை கண்டித்து மாணவர்கள் போராட்டம்!

Advertiesment
Edappadi Palanisamy

Prasanth K

, புதன், 9 ஜூலை 2025 (15:50 IST)

கோயில் பணத்தில் கல்லூரி கட்டுவதாக திமுகவை விமர்சித்து எடப்பாடி பழனிசாமி பேசியிருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியை கண்டித்து கல்லூரி மாணவர்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

நேற்று கோயம்புத்தூரி எழுச்சிப் பயணத்தை தொடங்கிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் பயணம் செய்ய உள்ளார். நேற்று கோவையில் அவர் பேசியபோது, திமுக அரசுக்கு கோயில் பணத்தை கண்டாலே கண் உறுத்துவதாகவும், பக்தர்கள் அளித்த காணிக்கையில் கோயிலை மேம்படுத்தாமல் கல்லூரிகளை கட்டி வருவதாகவும், அதை அரசு பணத்தில் கட்டினால் என்ன என்று கேட்டும் பேசியிருந்தார்.

 

இந்நிலையில் கோயில் பணத்தில் கல்லூரிகள் கட்டுவது குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூரில் உள்ள கபாலீஸ்வரர் கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மடப்புரம் விசாரணை மரணம்! போராட்டம் நடத்தும் தவெக! அஜித்காக வருவாரா விஜய்?