அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் பிரச்சார பயணத்தைத் தொடங்கிய நிலையில், சாலையோர வியாபாரி ஒருவரிடம் 100 ரூபாய் கொடுத்து எலுமிச்சம்பழம் வாங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தி.மு.க. ஆட்சியை அகற்றியே தீர்வோம் என்ற கோஷத்துடன் நேற்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவையில் தனது பிரச்சார பயணத்தை தொடங்கிய நிலையில், அவருக்கு செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நேற்று கோவை அருகே ஒரு சாலையோர வியாபாரியிடம், "100 ரூபாய்க்கு எலுமிச்சம்பழம் கொடுங்கள்" என்று கேட்டு எடப்பாடி பழனிசாமி வாங்கினார். 100 ரூபாய்க்கு 20 எலுமிச்சம்பழங்களை வாங்கி, அதற்கான காசையும் அந்த வியாபாரியிடம் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடுத்தார்.
இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. "மக்களோடு மக்களாக ஒரு சாதாரண மனிதராக முன்னாள் முதலமைச்சர் ஒருவர் இருக்கிறார்" என்று இந்த வீடியோவுக்கு கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
ஏற்கனவே, முதல்வர் ஸ்டாலினும் பல நேரங்களில் நடைப்பயிற்சியின்போது சாலையில் உள்ள பொதுமக்களிடம் பேசியுள்ளார் என்பதும், சில டீக்கடைகளிலும் டீ குடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.