Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோவில் தீமிதி திருவிழா! தவறி விழுந்த அதிமுக பிரமுகர் உடல் கருகிய பரிதாபம்!

Advertiesment
Fire walk festival

Prasanth Karthick

, செவ்வாய், 30 ஜூலை 2024 (11:39 IST)

தாம்பரம் பகுதியில் நடந்த கோவில் தீ மிதி திருவிழாவில் அதிமுக பிரமுகர் அவரது மனைவியுடன் தவறி தீயில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

ஆடி மாதம் நடந்து வரும் நிலையில் பல ஊர்களிலும் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் கோலாகலமாக நடந்து வருகின்றது. அவ்வாறாக தாம்பரம் அடுத்த இரும்புலியூரில் உள்ள நாகவல்லி அம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா நடந்து வருகிறது. இதில் நேற்று தீமிதி திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.

 

இந்த தீமிதி திருவிழாவிற்கு அப்பகுதியின் முன்னாள் கவுன்சிலரும், அதிமுக தாம்பரம் மாநகர பொருளாளருமான மாணிக்கம், அவரது மனைவி தனலெட்சுமியுடன் வந்திருந்தார். தீமிதி திருவிழாவை அவர்கள் கண்டு களித்துக் கொண்டிருந்தபோது திடீரென நிலைத்தடுமாறி தீமிதிக்குள் விழுந்தனர். அவர்களை காப்பாற்ற முயன்ற அன்பழகன் என்பவரும் தவறி தீக்குள் விழுந்தார்.

 

மூவரும் உடலில் தீப்பற்றி கருகிய நிலையில் கஷ்டப்பட்டு மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீமிதி திருவிழாவில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரளா நிலச்சரிவு குறித்து விவாதிக்க கோரி காங்கிரஸ் எம்.பி நோட்டீஸ்..!