கேரள நிலச்சரிவு குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மக்களவையில் காங்கிரஸ் எம்பி ஹிபி ஏடன் என்பவர் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்களவையில் இன்று வழக்கமான நடைபெறும் அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு கேரள நிலச்சரிவு குறித்து விவாதிக்க வேண்டும் என்று அவர் தனது நோட்டீஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகள் வழங்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அதேபோல் மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்துவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
முன்னதாக கேரளாவில் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான குடும்பங்கள் சிக்கி உள்ளதாகவும் அவர்களை மீட்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த மீட்பு பணியில் ஹெலிகாப்டர், இந்திய விமானப்படை உள்ளிட்டவை களம் இறங்கியுள்ளது என்பதும் இதுவரை 29 பேர் இதில் உயிரிழந்தவர்களாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.