Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று காலை 9 மணியுடன் முடியும் கெடு: பணிக்கு திரும்புவார்களா ஆசிரியர்கள்?

Advertiesment
ஆசிரியர்கள்
, செவ்வாய், 29 ஜனவரி 2019 (07:11 IST)
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் இன்று காலை 9 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அவகாசம் அளித்துள்ளது. அவ்வாறு பணிக்கு திரும்பாத ஆசிரியர்களின் இடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டு அந்த இடத்திற்கு தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப இன்று காலை 9 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணிக்குள் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் அப்பணியிடங்கள் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும். ஆசிரியர்கள் பணிக்கு திரும்புவதை தொலைபேசி வாயிலாகவோ, குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ் ஆப் மூலமாகவோ ஆசிரியர்கள் உறுதிப்படுத்தலாம்.

webdunia
மேலும்  காலிப்பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

நேற்றே ஒருசில ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் இன்று பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் அப்படி பேசியிருக்க கூடாது.: சித்தராமையா தவறாக நடந்து கொண்டதாக கூறப்பட்ட பெண் திடீர் பல்டி