ஒரு அரசியல் தலைவர் பாசிட்டிவ் கருத்தை வெளியிட்டால் அதை கண்டுகொள்ளாத ஊடகங்கள் அரசியல்வாதிகளின் சிறிய தவறை கூட பெரிதுபடுத்தி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அதைபோலவே சித்தராமையா தவறாக நடந்து கொண்டதாக வெளிவந்த செய்தியில் முழுவதையும் அறியாமல் பல ஊடகங்கள் அவர் துப்பட்டாவை இழுத்ததை மட்டும் செய்தியாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தின
இந்த நிலையில் சித்தராமையாவால் அவமரியாதை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பெண்ணே தன் மீதுதான் தவறு என்று திடீர் பல்டி அடித்துள்ளார். இன்று மாலை அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
‘முன்னாள் முதல் மந்திரி சித்தராமையாவுக்கும் எனக்கும் இடையில் எந்த சச்சரவும் கிடையாது. அவர் இந்த மாநிலத்தின் மிக சிறந்த முதல் மந்திரியாக ஆட்சி செய்தவர். நான் சில குறைகளை தெரிவித்து மூர்க்கத்தனமாக பேசினேன். ஒரு முன்னாள் முதல் மந்திரியிடம் நான் அப்படி பேசியிருக்க கூடாது. மேஜையை தட்டியபடி நான் பேசிய முறையை கண்டுதான் அவர் கோபப்பட நேர்ந்தது’ என ஜமாலா தெரிவித்துள்ளார்.