Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

12ஆம் வகுப்பு மாணவருடன் இரவில் அந்தரங்க பேச்சு.. 40 வயது ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது..!

12ஆம் வகுப்பு மாணவருடன் இரவில் அந்தரங்க பேச்சு.. 40 வயது ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது..!
, வியாழன், 4 மே 2023 (07:57 IST)
40 வயது ஆசிரியை ஒருவர் 12 ஆம் வகுப்பு மாணவருடன் இரவில் மொபைல் போன் மூலம் அந்தரங்க பேச்சில் ஈடுபட்டதை அடுத்து போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
 திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயது ஆசிரியை தேவி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் பிரிந்து வாழ்வதாக புறப்படுகிறது. 
 
இந்த நிலையில் தன்னிடம் டியூஷன் படித்த பத்தாம் வகுப்பு மாணவருடன் அவர் இரவில் அந்தரங்க பேச்சில் ஈடுபட்டு வருவதாக மாணவரின் பெற்றோர் சந்தேகம் அடைந்தனர். இதனை அடுத்து அந்த மாணவரை கண்காணித்த போது அது உறுதி செய்யப்பட்டது. 
 
இதனை அடுத்து மாணவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மகளிர் போலீசாரிடம் மாணவரின் பெற்றோர் புகார் அளித்ததை அடுத்து இந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியை தேவியை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அந்த மாணவர் தற்போது குழந்தைகள் நல காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அக்னி நட்சத்திரம் இன்று ஆரம்பம்.. வெயில் அதிகமாக இருக்குமா?