தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்கு அனுமதி தரக்கோரி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்ப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் பராமரிப்பு பணிகளுக்கு அனுமதி வழங்கியது.
இந்த ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கக்கூடாது என்று கூறி விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக கட்சியினர், மற்றும் ஸ்டெர்லை ஆலை எதிர்ப்பாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் இணைந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு தாக்கல் செய்ய் வந்தனர்.
அங்குப் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் சிலரை மட்டும் உள்ளே சென்று மனு அளிக்கும்படி கூறினர். அப்போது போலீஸார் – மனு அளிக்க வந்தவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, சுமார் 100க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,