Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழர்களின் மனம் இன்று உடைந்துவிட்டது - நடிகை குஷ்பு

Advertiesment
தமிழர்களின் மனம் இன்று உடைந்துவிட்டது - நடிகை குஷ்பு
, செவ்வாய், 29 டிசம்பர் 2020 (17:39 IST)
நடிகர் ரஜினியின் முடிவு அனைத்துத் தமிழர்களின் இதயங்களையும் உடைத்துவிட்டதாகத் தெரிவித்துள்ள நடிகை குஷ்பு.

அண்ணாத்த படப்பிடிப்பின்போது, 4 பேருக்கு கொரோனா தொற்றால் ரஜினி ஐதராபாத்தில் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார். அப்போது அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அப்போலோ மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன் தினம் சென்னையிலுள்ள போயஸ்கார்டன் இல்லம் திரும்பினார்.

இநிலையில் இன்று ஒரு அவசர அறிக்கை வெளியிட்டார். அதில், நான் கட்சி தொடங்கப்போவதில்லை; இதற்காக என்னை மக்கள் மன்னிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், ரத்த அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு வரக்கூடாது ஏற்கனவே மாற்று சிறுநீரகம் பொருத்தியுள்ளதால், அரசியல் கட்சி தொடங்கினால் ரத்த அழுத்தம் ஏற்பவாய்ப்புண்டு என்று என்னை நம்பி வருபவர்கலை பலிகடா ஆக்கவிரும்பவில்லை என வெளிப்படையாக கூறியுள்ளார்.

இந்நிலையில் பிரபல கட்சித் தலைவர்கள் ரஜினியின் முடிவு கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் நடிகை குஷ்பு, ரஜினி சார் உங்களுடைய ’’அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை ’’என்ற முடிவு தமிழர்களின் இதயத்தை உடைத்துவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடுரோட்டில் இளைஞர் அடித்துக் கொலை... வேடிக்கை பார்த்த மக்கள் !