Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு அண்ணாத்த படப்பிடிப்பு – ரஜினியின் சம்மதம்!

பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு அண்ணாத்த படப்பிடிப்பு – ரஜினியின் சம்மதம்!
, செவ்வாய், 8 டிசம்பர் 2020 (10:18 IST)
நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை கர்நாடகாவில் கொண்டாடி முடித்துவிட்டு பிறகு ஐதராபாத் சென்று அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளார்.

பல வருடங்களாக கன்னித்தீவு போல இழுத்துக் கொண்டிருந்த ரஜினியின் அரசியல் வருகை இப்போது உறுதியாகியுள்ளது. ஜனவரி மாதம் கட்சி ஆரம்பித்து சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்றும் ரஜினி அறிவித்துள்ளார். மேலும் இது குறித்து பேசிய அவர் அண்ணாத்த படத்தை முடித்துக் கொடுக்க வேண்டியது தனது கடமை எனவும் கூறியுள்ளார்.

இதனால் அண்ணாத்த படம்தான் அவரின் கடைசி படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. ரஜினிகாந்தின் வயது மற்றும் உடல்நிலை காரணமாக அரசியல் மற்றும் சினிமா என இரட்டைக் குதிரையில் அவரால் பயணிக்க முடியாது என்பதால் அவர் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிடலாம் என்ற முடிவில் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது கர்நாடகாவுக்கு அண்ணனைப் பார்க்க சென்றுள்ள ரஜினிகாந்த், அங்கு தனது 70 ஆவது பிறந்தநாளைக் கொண்டாட உள்ளார். அதன் பிறகு அங்கிருந்து ஐதராபாத் சென்று அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் ரஜினி வீட்டுக்கு முன் உதவி கேட்டு உட்கார்ந்திருக்கும் பெண்கள்