தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்த தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டு காலத்திற்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில் ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தொடர்ந்து பள்ளிகள் திறக்கப்படாமல் இருப்பதால் இடைநிற்றல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக பலர் கூறிவரும் நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்த ஆலோசனை தொடங்கியது.
முதற்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறப்பது குறித்து கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதனால் பள்ளிகள் திறப்பு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.