Publish Date: Tue, 27 Jul 2021 (12:41 IST)
Updated Date: Tue, 27 Jul 2021 (12:46 IST)
தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக பல இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளபடி இன்று நீலகிரி, கோயம்புத்தூர், சேலம் ஆகிய மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதவிர ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமானது முதல் லேசானது வரை மழை பெய்யும் என்றும், தென்மேற்கு பருவக்காற்றால் தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி வரை 5 நாட்களுக்கு மழை தொடரும் என கூறப்பட்டுள்ளது.