Publish Date: Tue, 27 Jul 2021 (10:47 IST)
Updated Date: Tue, 27 Jul 2021 (10:50 IST)
திருக்கழுக்குன்றம் பகுதியில் இரவு நேரத்தில் பிரகாசமாக ஜொலித்தபடி மர்ம பொருள் ஒன்று விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே உள்ள வடக்குப்பட்டு கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் ஆடுகள் வளர்த்து வந்த நிலையில் வானிலிருந்து பிராகசமான வெளிச்சத்தோடு மர்ம பொருள் ஒன்று அப்பகுதியில் விழுவதை கண்டுள்ளார்.
இதுகுறித்து உடனடியாக அவர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் அப்பகுதிக்கு விரைந்த விஏஓ மற்றும் போலீஸார் 10 கிலோ எடை கொண்ட அந்த மர்ம பொருளை ஆய்வுக்கு உட்படுத்த எடுத்து சென்றுள்ளனர். வானத்திலிருந்து விழுந்த மர்ம பொருள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.